பொதுவாக தமிழகத்தில் பண்டிகை தினங்கள், தொடர் விடுமுறை, வார இறுதி விடுமுறை தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிகளவில் கட்டணங்கள் வஸோலித்து வருகிறது. அந்தவகையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.700-ரூ.1500 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3500 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதே போல பல இடங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.