ஹரியானா மாநிலம் குருக்ராம் நகரில், ஒரு கேப் பயணத்தின் கட்டணமாக ரூ.300 கொடுக்க மறுத்த பெண் ஒருவர், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் விமர்சிக்கப்படுகிறார். வீடியோவில், ஒரு உபேர் டிரைவர் அந்தப் பெண்ணை திட்டிக் கொண்டே, “உங்களுக்கு 3 லட்சம் நஷ்டம் இல்லனா என் பேரு ராம் இல்லை” என்று ஆவேசமாக கத்துகிறார்.
एक लाख का फोन और कम से कम 30,000रु की साड़ी पहनी है मैडम ने — और टैक्सी वाले को 300 रु तक नहीं दे रही… टैक्सी वाला late भी हुआ होगा तो ट्रैफिक की वजह से।
पैसे तो आए, लेकिन संस्कार चले गए.. 😡 pic.twitter.com/ofLB54MhZL— 𝙼𝚛 𝚃𝚢𝚊𝚐𝚒 (@mktyaggi) September 27, 2025
அதே நேரத்தில், அந்தப் பெண், ஐபோன், வைரம், தங்கம், மற்றும் ஜொலிக்கும் புடவையுடன், கார் கட்டணத்துக்கு பணம் கொடுக்காமல் கிளப்பில் நுழைந்துவிட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் மனநிலை மற்றும் பணக்கார பரிதாபம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருவர், “அவ்வளவு காஸ்ட்லி டிரஸ், ஆனா டிரைவருக்கு ₹300 கொடுக்க மனசு வரல” என ட்வீட் செய்திருக்கிறார். இன்னொருவர், “இவர்கள் பப்பில் லட்சங்களை செலவு செய்வாங்க, ஆனா ஒரு ஏழை டிரைவருக்கு பணம் கொடுக்க அவமானமா?” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதேவேளை, சிலர் டிரைவரின் நடத்தை மீதும் சுட்டிக்காட்டியுள்ளனர். “டிரைவர்கள் கூட எல்லாரும் நல்லவங்க இல்லை; சில பேர் எங்களிடம் கூட ரூ.100 கூடுதல் வாங்கியிருக்காங்க, அவங்க UPI ஏற்க மாட்டாங்க” என கூறியுள்ளனர்.
இருப்பினும், முக்கியமாக மனிதநேயமாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதே சமூகத்தின் கோரிக்கையாகும். தற்போது அந்த வீடியோ, வாட்ஸ் அப் முதல் இன்ஸ்டாகிராம் வரை, பல இடங்களில் பகிரப்பட்டு வருகிறது.
