மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன் என எடப்பாடி சொல்வது உண்மையா என
முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இப்போ கார்ப்பரேஷன்ல இருக்காருன்னு நினைக்கிறேன். அவர்கிட்ட கொஞ்சம் கேமராவை நீட்டுங்க.  இவர் ஸ்டைல சொல்லணும்னா….

பழனிச்சாமி ஸ்டைல்ல….  கொரோனோவில் இறந்து போனவர்களுக்கெல்லாம் நிவாரணம் என கொடுங்கள் அன்றைய செயலாளர் ராதாகிருஷ்ணன் என மூணு தடவை லெட்டர் எழுதினார். ஆனால் கொடுக்கவே இல்லை. நிவாரணம் கொடுத்தது  இப்பொழுது ஆண்டு கொண்டிருக்கின்ற முதல்வர் ஸ்டாலின் தான். கொரோனாவில் என்ன கிழிச்சிட்ட நீ. ஒண்ணுமே செய்யல,  சும்மா பொய். இதெல்லாம்  நம்பாதீங்க.

உளறுவதற்கு தான் எட்டப்படிக்கு ”புரட்சித்தமிழர்” பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் என சொல்ல வராம அபிராமி அபிராமி என உளறுனது. சேக்கிழார்  கம்பராமாயணத்தை எழுதினார் என சொன்னது. சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர்…

நாட்டு மக்கள் போற்றி புகழ்ந்து வணங்கக்கூடிய அண்ணல் அம்பேத்காரை தூக்கில் போட்டது….  2019ல் மோடி ஆட்சியில் இருந் போது தான் நீட் கொண்டு வந்தாங்க, அப்படின்னு சொல்றது. இந்த மாதிரி எல்லாம் புரட்சி எங்கயுமே செய்யவே  முடியாது என தெரிவித்தார்.