பாகிஸ்தான் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இந்திய இளைஞர் ஒருவரிடம், அவர் இந்தியர் என்று தெரிந்ததும் அங்கிருந்த வியாபாரி ஒருவர் பணம் வாங்க மறுத்த நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
பாகிஸ்தானில் உலர்ந்த பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்த முதியவரிடம் அந்த இளைஞர் விலை கேட்க, அவர் 250 கிராம் பழங்களின் விலை 50 ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். அப்போது அந்த இளைஞர் தன்னிடம் இருந்த 100 ரூபாய் இந்திய நோட்டைக் காட்டியபோது, தான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டவுடன் ஆச்சரியமடைந்த அந்தப் பாகிஸ்தான் வியாபாரி, நீங்கள் இந்தியாவின் விருந்தினர் என்பதால் உங்களிடம் பணம் வாங்க மாட்டேன் என்று கூறி அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துள்ளார். இருப்பினும் அந்த இந்திய இளைஞர் வற்புறுத்தி பாகிஸ்தான் ரூபாயை அவரிடம் வழங்கி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாட்டு மக்களிடையே நிலவும் மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
