
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறையிலும் AI தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கல்வியில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த AI தொழில்நுட்பம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்றாலும், இதற்கு மனிதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்ய ‘ஜெமினி’ என்ற கூகுளின் நுண்ணறிவு உதவியை நாடியுள்ளார்.
அப்போது அது மாணவனை பார்த்து “தயவுசெய்து செத்து விடு” என்று மிரட்டி உள்ளது. இது வருங்காலத்தில் பேராபத்தை விளைவிக்கும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, AI தொழில்நுட்பம் பின்னாளில் பேராபத்தை விளைவிக்கும் AI தொழில்நுட்பத்தின் வருகையால் உலகில் 15 சதவீதம் ஊழியர்களுக்கு வேலை இழப்பு நேரிடும் என்றும் அவர் கூறினார்.