WPL 2023 தொடரில் இன்று குஜராத் ஜெயன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று மோதுகின்றது. இந்த போட்டியை மைதானத்தில் அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என்று பிரிமியர் லீக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது இந்த இலவச டிக்கெட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.