பெங்களூரு நகரத்தில் பேராசிரியர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல மேடையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் கல்லூரி விழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. உடனடியாக பேராசிரியர் ஒருவர் மேடைக்கு ஏறி மைக்கேல் ஜாக்சன் போல நடனம் ஆடினார். இதனை பார்த்த மாணவர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் “உங்கள் லெக்சரர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் பெற்றால்” என்று பெயரில் வெளியாகி  வருகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவித்து வருவதோடு தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

AJ பதிவைப் பகிர்ந்துள்ளார் (@ajdiaries___)