சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று, “இது எப்படி யோசிக்கிறீங்கப்பா?” என அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதில், ஒரு நபர் கார் சீட் பெல்டைப் பயன்படுத்தி வீட்டுக்கதவை லாக் போட்டிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by سنگ مصنوعی | سنگ آنتیک | سینک کورین | تراورتن صنعتی (@artificial_stone_equipment)

வீடியோவில் காணப்படுவது போல, அந்த நபர் பழைய கார் சீட் பெல்ட்டை எடுத்துக் கொண்டு, அதை வீட்டுக்கதவின் ஒரு பக்கத்தில் பெல்ட் ஒரு முனையையும், எதிர் புறச் சுவரில் கிளிப்பை செருகியுள்ளார். கதவை மூடும்போது, சாதாரணமாக ஒரு காரில் செய்யும் மாதிரி “க்ளிக்” என்று பெல்ட் பூட்டு சேர்ந்து கதவு லாக் ஆகிறது. கதவைத் திறக்க வேண்டுமானால், சீட் பெல்ட் லாக் திறப்பது போலவே, ஒரு கிளிக் செய்தால் போதும்.

இந்த வீடியோவைக் காணும் தருணத்தில் இது ஒரு எளிய யோசனை போல தோன்றலாம், ஆனால் யாரும் இதைப் பண்ணி இருப்பீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. “திருடன் கதவைத் திறப்பதற்கு முன்னால், சீட் பெல்ட் எப்படி திறக்கிறது என்று தெரிஞ்சிருக்க வேண்டாமா?” என நெட்டிசன்கள் நக்கலாக கமெண்ட் செய்துள்ளார்கள்.