அமெரிக்காவைச் சேர்ந்த இணையதளப் படைப்பாளி ஹேலி பேரட், இந்தியத் தின்பண்டங்களை முதல்முறையாகச் சுவைத்து வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மில்க் பிக்கீஸ் பிஸ்கட்டை பாலில் நனைத்துச் சுவைத்த அவர், அதற்குப் பத்து மதிப்பெண்களுக்கு 7.8 மதிப்பெண்களை வழங்கியதோடு, அது அமெரிக்காவின் பிரபலமான பிஸ்கட் வகையை விடச் சிறப்பாக உள்ளதாகப் புகழ்ந்துள்ளார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து இந்திய மேஜிக் மசாலா சுவை கொண்ட லேஸ் சிப்ஸ் வகையைச் சாப்பிட்ட அவர், அதன் காரமான சுவை தமக்கு மிகவும் பிடித்துள்ளதாகக் கூறி அதற்கு முழுமையான பத்து மதிப்பெண்களை வழங்கி அசத்தினார். சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொளியில், பிரிட்டானியா நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றன.
இந்தியத் தின்பண்டங்களின் தனித்துவமான சுவையை வெளிநாட்டவர் ரசித்துப் பாராட்டும் இந்தச் சம்பவம் இந்திய இணையவாசிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
