செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  உங்களுக்கு தெரியும். நீங்க படிச்ச புள்ள…  காஷ்மீர் எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவோடு கொண்டுவரப்பட்டது என உங்களுக்கு தெரியும். தனித்த ஒரு நாடு.அதை இழுத்துக்கிட்டு வந்து நம்மளோடு  சேர்ப்பது  நேரு கொடுத்து வாக்குறுதி,  அது எல்லாம் தெரியும். இன்னைக்கு இவர்கள் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழக்கூடிய ஒரு நிலப்பரப்பு என்கிறதால, இவ்வளவு சிக்கலை அவங்க உருவாக்கறாங்க..

உருவாக்கி இப்போது அதை  இரண்டாவது உடைத்து..  அதற்கு இந்தியாவுடைய ஒரு பகுதி என்றாங்க…  காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாமே இந்தியாவிற்குள்  வாங்க  என்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு போங்க என்கிறார்கள்...  இதை  எப்படி பாக்குறீங்க ?

இந்த மாதிரி பேசுறவனுக்கு என்ன இருக்கு ? ஆர்.எஸ்.எஸ்,  பிஜேபிக்கு  தகுதி, நேர்மை என்ன இருக்கு ?  எத்தனை தடவை கேட்கின்றேன்.  இந்த நாடு அடிமைப்பட்டு கிடைக்கும்போது இந்த நாட்டின் விடுதலைக்கு போராடியவன் பாகிஸ்தான்,  பங்களாதேஷ்ல இருக்கான்.

இந்த நாட்டு அடிமைப்பட்டு கிடக்கும்போது…  இந்த நாட்டு விடுதலைக்கு போராடாதவன் எல்லாம் இன்னைக்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ்ல இருக்கான்.  பாராளுமன்றத்தில்,  சட்டமன்றத்தில் இருக்கான்.  உயர்ந்த பதவியில் இருக்கான். இருக்கானா ? இல்லையா ?  ஆர்எஸ்எஸ் இந்த நாட்டின் விடுதலைக்கு….  பிஜேபியில் இன்றைக்கு இருக்கின்ற லீடர்கள்,

தலைவர்கள்….  இந்த நாட்டின் விடுதலைக்கு போராடிய ஒரே ஒரு போராட்டம். நான் ரொம்ப கேட்கல… என் பாட்டன் செக்கிழுத்து இருக்கான்..  சிறைப்பட்டு இருக்கோம்… நாங்கள் தூக்குல தொங்கி இருக்கோம்…  என்கிட்ட தேசப்பற்று கற்பிக்க வந்திருக்கான்,  எனக்கு வெறுப்பு வருமா?  வராதா ? என கேள்வி எழுப்பினர்.