அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆஸ்திரேலியா 4 விக்கெட்  இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 முறையாக உலக கோப்பையை வென்று அசத்தி உள்ளது.