அனைத்து உலக பெண்கள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி அன்று உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகம் எங்கும் பல நாடுகளில் பொது விடுமுறை ஆகும். ஐ.நா பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்து உலகப் பெண்கள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பாட்டாளிகள் மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, “பெண்கள் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது உயர்ந்த நோக்கம். அந்த நோக்கம் விரைவில் எட்டப்பட வேண்டும் என்றால் பெண்களுக்கு முழு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மட்டும் வெறும் முழக்கமாக பயன்படுத்தாமல் உண்மையாகவே அனைத்து துறைகளிலும் மகளிருக்கு அதிகாரங்களும், முழு உரிமையும், முழுமையான சுதந்திரமும் நாம் அளிக்க வேண்டும் என்பதை இந்த நாளில் உறுதி ஏற்போம். நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்”. என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்