ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மது கொடுக்க நின்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த சாந்தி(36) என்பவரது பையில் இருந்து மண்ணெண்ணெய் வாசனை வீசியது. இதனால் போலீசார் சாந்தி வைத்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணையை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தனர்.

அப்போது சாந்தி கூறியதாவது, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் சுகந்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு குழந்தை இல்லை. எனது கணவர் பல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக எனது கணவருக்கு அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் எனது கணவரை கண்டித்தேன். ஆனால் அந்த பெண்ணுடன் பழகுவதை சுகந்தன் நிறுத்தவில்லை. மேலும் வீட்டிற்கு வருவதையும் தவிர்த்து விட்டார். அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. எனது கணவரின் தாய், தந்தை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தேன். எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது