கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நேரு நகரைச் சேர்ந்த சாந்தி (58), அவரது குடும்பத்துடன் பழக்கமாக வளர்த்த பூனையால் எதிர்பாராதவிதமாக பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடக்குமுன் வீட்டின் வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வருவதைக் கவனித்த பூனை, அதை துரத்தி, கடித்து விளையாடியது. பின்னர் பாம்பை வாயில் பிடித்துப் படுக்கையறையில் போட்டுவிட்டு சென்றது.

அந்த அறையில் சாந்தி தூங்கிக் கொண்டிருந்தபோது, பூனை கடித்த ஆத்திரத்தில் இருந்த பாம்பு, அங்கும் இங்கும் ஓடி சாந்தியை கடித்து விட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி, பாம்பு தன்னை கடித்ததை அறிந்து அலறியபோது, அவரது மகன் சந்தோஷ் விரைந்து வந்து, உடனடியாக சாந்தியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை அளித்தும், சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.