சென்னையில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் பரவி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொசு உற்பத்தியை தடுக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவு புகார் வந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் குறைதீர்க்கும் குழுவிற்கு 2,100 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிக்கன் குனியா பாதிக்கப்பட்ட எட்டு பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதை அடுத்து அதிகாரிகள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் அதிகரித்துள்ளனர். கொசு உற்பத்தி அதிகமாக உள்ள இடங்களில் மோட்டார் மூலம் புகை அடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசு தெளிப்பு மருந்து தெளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நோய் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.