தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூரில் நடத்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆசிரியர்கள் தகுதி தேர்வான டெட் தேர்வு எப்போது நடத்தப்படும் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கடந்த இரண்டு வருடங்களாக போட்டி தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த தேர்வு தொடர்பாக 149 GO இருக்கக் கூடாது என பலர் கோரிக்கை விடுத்து வருவதால் அது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான முடிவு எடுத்த பிறகு உரிய அறிவிப்பு வரும் என்றார்.

அதன் பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்வு எழுதி வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. தேவை வரும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, 10,143 ஆசிரியர்கள் பி.டி, எஸ்.எம்ஸ் மூலம் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த இடத்தை நிரப்புவதற்கு டிஆர்பியிடம் கால அட்டவணை வழங்கப்பட்டு உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். டெட் போட்டி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பேசிவிட்டு சொல்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.