முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை மாற்றிவிட்டு, சங்கரன்கோவில் MLA ராஜா அல்லது தமிழரசிக்கு பதவி கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீக்கப்படுவார் என்றும், டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.