தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருமானம் வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட வருமானம் அதிக அளவில் இருக்கும். இருப்பினும் சில முக்கியமான தினங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது கடைகளை மூட அரசு உத்தரவிடுகிறது. அந்த வகையில் மே தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நாளை மே தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் நாளை மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்தாலோ அல்லது திருட்டுத்தனமாக மதுவை விற்பனை செய்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.