தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர வேகத்தில் காய் நகர்த்தி வருகிறது. சென்னையில் நடைபெற்ற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், “சட்டசபை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடுமா?” என அதிரடியாக சவால் விடுத்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகளை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்துவதாகவும், முதல்வர் நாற்காலியில் ஒரு கால் மட்டுமே திமுகவுடையது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
