கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சின்ன கல்லார் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று முன்தினம் மாலை நேரம் அந்த வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்தது. அந்த பேருந்தில் 15 பயணிகள் இருந்தனர். யானை நிற்பதை பார்த்ததும் டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்து சில அடி தூரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் பேருந்தில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பேருந்து விட்டு கீழே இறங்கி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த யானை வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் பேருந்தில் ஏறிக்கொண்டார். பின்னர் பயணிகள் அனைவரும் இணைந்து சத்தம் எழுப்பியதால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.