கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாழியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டு கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவு குட்டியுடன் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது.

இதனையடுத்து அந்த யானை தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த காய்கறிகளை சாப்பிட்டு சென்றது. இதனால் அங்கு தங்கியிருந்த 2 தொழிலாளர்கள் லேசாக காயமடைந்தனர். அடிக்கடி யானைகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.