நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்வளா எஸ்டேட் பகுதியில் தைநீஷ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை 6 மணிக்கு தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்புக்கு நடந்து சென்றார் அப்போது புதர் மறைவில் குட்டியுடன் நின்ற கரடி தைநீஷை பலமாக தாக்கியது அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கரடியை விரட்டி அடித்தனர்.

உடனடியாக தைநீஷ் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த கட்டப்பெட்டு வனச்சரகர் செல்வகுமார், வனவர் வினோத் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று தைநீஷுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.