7 மாவட்ட செயலாளர் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா அறிவாயாலத்தில் இன்றைக்கு நடைபெற்ற மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வடசென்னையை சேர்ந்த ஒரு முக்கியமான அமைச்சர், தென் தமிழகத்தில் கடைகோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு மாவட்ட செயலாளர்,  அமைச்சராக இருக்கிறார். வட மாவட்டங்களை சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர், அமைச்சராக இருக்கிறார்கள். இது போன்ற முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் 7  பேர் மீது முதலமைச்சர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறார். உங்களுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் இன்னும் சரியாக செயலாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனத்திலும் சுணக்கமாக இருக்கிறது. அதேபோல சில கட்சி நிர்வாகிகள் உங்கள் மீது தொடர்ச்சியாக புகார் தெரிவிக்கிறார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் சொல்லி உள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் என்பது 15 நாட்களுக்கு முன்னாடியே சொல்லி தான் நடக்கும்.  ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியே வந்து,   7 நாட்களில் இன்றைக்கு நடைபெறுகிறது. அந்த அளவுக்கு பணிகள் செய்ய வேண்டும் என்பதின் அடிப்படையில் சொல்லி இருக்கிறார்.  ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்களோடு  இணைந்து செயல்படுவதற்கு நீங்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. உங்கள் மீது பொறுப்பாளர்கள் புகார் சொல்கிறார்கள்.

நீங்கள் அமைச்சராகவும் இருக்கிறீர்கள். எனவே முடிந்தால் வேலை செய்யுங்கள். இல்லை என்றால் ? விலகிக் கொள்ளுங்கள் என்பது போன்ற முதலமைச்சர் மிகவும் காட்டமாக சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் வாரத்திற்கு ஒருமுறை  தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதிக்கு சென்று கட்சி பணிகள் குறித்து செயலாற்ற வேண்டும். மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.  அதை வாக்காக மாற்ற வேண்டியது உங்களுடைய பொறுப்பு எனவும் முதலமைச்சர் பேசியிருக்கிறார்.