சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் பலவற்றில், சமீபத்தில் அதிக கவனம் பெற்றிருக்கும் வீடியோ ஒன்று இப்போது நெட்டிசன்களிடையே சிரிப்பை ஏற்படுத்தி வருகிறது. வெளியூரை சேர்ந்த ஒருவர், ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் “ஏன் தாஜ்மஹால் இந்தியாவிலேயே இருக்கிறது?” என கேட்கிறார்.
British museum ❌️ Chor Bazaar✅️ pic.twitter.com/ECYsnSeeI0
— Qasim Husain 🇮🇳 (@qasim_says_) October 3, 2025
அதற்கு அந்த பெண், “அது பிரிட்டன் கொண்டு போக முடியாத அளவுக்கு அதிக எடையில் இருந்தது!” என பதில் கொடுக்க, அதுவே இப்போது மக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிலை கேட்டவுடன் பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் சிரிக்க, அந்த பெண் சொல்லும் அர்த்தம் ஒன்றே ஒன்று தான். அதாவது பிரிட்டிஷ் மக்கள் எதுவாக இருந்தாலும் கொள்ளையடிக்கத் தயங்க மாட்டாங்க. தாஜ்மஹால் எடை அதிகமா இருந்ததால் தான் அதை தூக்கிக்கொண்டு போக முடியல. இல்லையென்றால் அதை கூட டாக்ஸி புக் பண்ணி லண்டனுக்கு கொண்டு போயிருப்பாங்க.
இந்த வீடியோ X தளத்தில் @qasim_says_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
