இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். இவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சடைய செய்தது. இவர் ஆஸ்திரேலியா- இந்தியா 5 தொடர் போட்டிகளான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடினார். இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தப் போட்டியில் மூன்றாவது தொடர் போட்டி முடிந்ததும் அஸ்வின் தனது ஓய்வு அறிவித்தார். இதற்கு விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அஸ்வின் தனது கேரியரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, நான் படித்த இன்ஜினியரிங் படிப்பு தான் நான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படாதற்கு காரணம். உன்னால் முடியாது என யாரேனும் கூறினால் நான் நிச்சயம் அதனை செய்துகாட்டுவேன். என்னிடம் யாராவது உன்னால் முடியும் என சொல்லி விட்டால் நான் தூங்கி விடுவேன். அதுபோல பலரும் என்னிடம் நீ இந்திய அணியின் கேப்டனாக ஆவதற்கு தகுதியானவன் என உற்சாகப்படுத்தினார்கள். அப்படி என்னால் இந்திய அணியின்  கேப்டனாக முடியும் எனக் கூறியதால் நான் தூங்கி விட்டேன் என்று கூறினார்.