வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெறுகிறது. இதில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் ஆகிய இரு அணிகளும் மோதினர். இந்தப் போட்டியின் முடிவில் ரங்க்பூர் ரைடர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின் இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைக்கூலுக்கி கொள்வது வழக்கமாகும். அதேபோன்று தமீம் இக்பால் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கை கொடுத்தார். அவ்வாறு கை கொடுத்து கொள்ளும் போது இன்னமும் போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறீர்களா? எனக் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அலெக்ஸ், தமீம் இக்பாலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களும் இருவரையும் பிரித்து இழுத்துச் சென்றனர். இதனால் சண்டை தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் தமிம் இக்பால் இவ்வாறு கேட்டிருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.