இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை நயவஞ்சகர் என மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். இதற்கு சமீபத்தில் மனோஜ் திவாரி விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, கம்பீரின் செயல்கள் அவர் கூறிய வார்த்தைகளுக்கு பொருத்தமாக இல்லை. அதனால்தான் நயவஞ்சகர் என கூறினேன்.

அவர் ஒரு முறை பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்தியாவில் வந்து பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு சென்று விடுகிறார்கள் எனவும் இந்திய அணிக்கு இந்தியர்கள் தான் பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும் எனவும் கம்பீர் தெரிவித்திருந்தார். இருந்தும் வாய்ப்பு கிடைத்த போது ஏன் அவ்வாறு துணை பயிற்சியாளர்களை இந்தியராக தேர்ந்தெடுக்கவில்லை?.

தான் விரும்பிய வெளிநாட்டு பயிற்சியாளர்களை கம்பிர்  தேர்ந்தெடுத்தும் அவரால் ஒரு போட்டியிலும் வெற்றிகளை பெற முடியவில்லை. அந்த வகையில் தான் அவருடைய செயல்கள் வார்த்தைகளுக்கு பொருத்தமாக இல்லை என கூறினேன். அதனால்தான் நயவஞ்சகர் என்று சொன்னேன். இனியாவது கம்பீர் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு வெற்றியை பெற வேண்டும். ஆனால் அவர் தலைமை பயிற்சியாளராக எவ்வளவு நாட்கள் தொடர்வார் என்பது நாம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.