செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் பத்திரிகையாளர் நீங்கள் திமுக கூட்டணியில் எம்எல்ஏ_ வாகி  இருக்கீங்க என்ற கேள்விக்கு, அது பிரச்சனை இல்ல. சீட் அட்ஜஸ்ட்மென்ட் என தெரிவித்தார். கட்சியில் முக்கியத்துவம் இல்லை. உங்களை விட ஜூனியர் எல்லாம் பொறுப்பில் இருக்கிற்றர்கள் என்ற கேள்விக்கு , அதை பற்றி எல்லாம் கவலையில்லை.

ஏற்கனவே சொல்லிவிட்டேன். பல நண்பர்கள் என்னை  விரும்புகிறார்கள் என்று..  இதை பற்றி என்னிக்குமே பேசாதீங்க. இன்னைக்கு கூட நான்  தேசிய எக்ஸிக்யூட்டிவ் மெம்பர். நான் எந்த பதவிக்கும் இதுவரை கேட்டதில்லை. எந்த தொகுதியும் நிற்பதற்கு கேட்டதில்லை. ஆனால் கட்சி எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

மணிப்பூர் விவகாரத்தில் ஊர் பெயர் தெரியாதவங்க யார் அந்த ( பாலகிருஷ்ணன்? ) அவர்கள் கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம். யாருன்னு எனக்கு தெரியாது. 20 நாளாக பள்ளிக்கூடம் நடக்குது,  குழந்தைகள் பாதுகாப்போடு பள்ளிக்கூடம் போய் வாராங்க, மணிப்பூர்ல…  அப்போ அமைதி திரும்பிய பிறகு வேண்டுமென்றே….  ஏதோ வெளிநாட்டு டூல்ஸ்ஸை வச்சிக்கிட்டு, நாட்டில் குழப்பம் பண்ண நினைக்கிறதே தேச துரோகம் தான், ஏன்னா 20 நாட்களாக ஸ்கூல் நடக்குது என தெரிவித்தார்.