தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகள் அனைவருக்கும் இனி ஆதார் எண் கட்டாயம் என்ற தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த துறை சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாகும்.

ஆதார் எண் இல்லாத பயனாளிகள் விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆதார் எண் வழங்கப்படும் வரை வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட்,ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 10 ஆவணங்களை அடையாளச் சான்றாக வழங்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.