தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்து கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்னைலியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேலாண்மையில் பட்டப்படிப்பு பயில தாட்கோ மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தாட்கோ நிறுவன நிதி உதவி பெற 10,12ம் வகுப்புகளில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். www.tnhdco.com என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் மேலும் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். நிதியுதவி நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.