தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் மீனா. சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே மீனா  வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் வித்யாசாகர் உடல் நல குறைவினால் உயிரிழந்தார். கணவர் இறப்பிலிருந்து மீண்டு தற்போது மீனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அதோடு நடிகை மீனா பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது ரசிகர் ஒருவர் ஷாஜகான் படத்தில் விஜயுடன் சேர்ந்து சரக்கு வச்சிருக்கேன் என்ற ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு நடிகை மீனா எனக்கு அது எந்த பாட்டு எப்படி ஆட போகிறோம் என்பது பற்றி முதலில் எந்த ஐடியாவும் கிடையாது. நான் அந்த பாட்டுக்கு விஜயுடன் போட்டி போட்டு நடனமாடியிருப்பேன் என்று சிரித்தபடி கூறினார். மேலும் அந்த சமயத்தில் மிகவும் பிசியாக இருந்ததாகவும் விஜயுடன் சேர்ந்து நடிக்க இரு படங்களில் எனக்கு வாய்ப்பு வந்த போதும் அதை நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன் எனவும் மீனா கூறியுள்ளார். விஜயுடன் சேர்ந்து பிரியமுடன் மற்றும் பிரண்ட்ஸ் போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாவுக்கு வாய்ப்பு சென்ற நிலையில் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக விஜய் பட வாய்ப்பை மீனா  நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.