தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் போன்றவைகள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மூன்றாம் பாடலான சிவோகம் பாடல் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.