தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். அதன் பிறகு சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் மற்றும் திரிஷா அடங்கிய ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் ரொமான்டிக் காட்சிகள் இருக்காது. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு இணையும் திரிஷா மற்றும் விஜய் இடையே ரொமான்டிக் காட்சிகள் இருக்குமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது அந்த சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக லியோ படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது விஜய் மற்றும் திரிஷா இடையே கண்டிப்பாக ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு என்னதான் ட்ரீட்டாக அமைந்தாலும் படக்குழுவினர் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.