பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்-க்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த காயம் பட்டுள்ளது. பெங்களூருவில் கேடி படப்பிடிப்பில் அவர் இருந்தபோது விபத்து ஏற்பட்டது. குண்டுவெடிப்பு தொடர்பான காட்சியில் அவர் நடித்தபோது எதிர்பாராமல் அவர் அருகிலேயே குண்டு வெடித்தது. இதனால் சஞ்சயின் முகம், தலை, மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் முதலுதவி செய்துகொண்டு அவர் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.