கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீங்க ? தமிழகத்தோட மருத்துவ கட்டமைப்பு கேள்விக்கு உள்ளாகுதுன்னு நினைக்கிறீங்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

இதை ஏன் அண்ணன் கிட்ட கேக்குற. எங்க அண்ணன் மா.சு கிட்ட கேளு… இந்தியா முழுமைக்குமே அரசு மருத்துவ கட்டமைப்பு என்பது ரொம்ப சுமார். மருத்துவர்கள் தரமான மருத்துவர்கள் இருக்காங்க… மருத்துவ  கட்டமைப்பை செழுமைபடுத்தி சிறப்பாக கொண்டு வருவதற்கான நோக்கம் இல்லாததால், மருத்துவத்திற்கு போன  பச்சை குழந்தை கையை எடுக்க வேண்டியது சூழல் வந்தது.

இதெல்லாம் இந்த மாதிரி தான்… இதுதான் தரமாக இருக்கு…  இப்போ நீங்க அரசு சார்ந்தவர்கள்,  அரசு ஆளுகிறவர்கள்,  இவர்களெல்லாம் காவேரி, அப்போலோ, எம்.ஜி ராமச்சந்திரா இந்த மாதிரி தனியார் மருத்துவமனைகளை தேடி போறதுக்கு காரணம் என்ன ? அப்போ அரசு மருத்துவமனை தரம் இல்லை என்று அவர்களே ஒத்துக்குறாங்க, அப்போ அது பேசி பயன் என்ன இருக்கு ?

அமைச்சர்கள் போகக்கூடிய இடங்களில் மக்கள் கேள்வி கேட்டு துரத்தி அடிக்கக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது. ஆனாலும் தன்னம்பிக்கையோடு 100% நாங்கள் பணிகளை சீரும், சிறப்புமாக செய்துவிட்டோம் என்று எந்த நம்பிக்கையில் சொல்றாங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புறாங்க. அதில் இருக்கின்ற நியாயம் உங்களுக்கு புரியும்.  அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் மேலே குறை இல்லன்னு நிரூபிக்க நினைப்பாங்க. இரண்டும் நடக்கிறது தானே….  நாங்க தப்பு பண்ணிட்டோம், சரி பண்ணிடுறோம்… எங்கள் மேல தவறு இருக்கு அப்படின்னு எந்த அதிகாரம் ஒத்துக்கொள்ளும் ? என கேள்வி எழுப்பினார்.