செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ரெண்டு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.ஒன்று மானியத்தை யார் யாரெல்லாம் விட்டுக் கொடுப்பீர்கள் என்கின்ற விருப்பத்தை மக்களிடமே கொடுத்தார் பிரதமர் மோடி. யார் யாருக்கெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் என்று கேட்டவுடன்,  இந்த நாட்டில் இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் எங்களுக்கு மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுத்தார்கள்.

இன்னொரு முக்கியமான காரியம் என்ன பண்ணாரு ? சுதந்திர இந்தியாவில இதுவரைக்கும் கொடுத்த சிலிண்டரோட கிட்டத்தட்ட 30%,  40% புது சிலிண்டர் இணைப்புகளை ஏழைப் பெண்களுக்கு இலவசமாக கொடுத்தார். தயவு செய்து காங்கிரஸையும் – பிஜேபியும் இதுல ஒப்பிடாதிங்க. புதிதாக வருஷத்துக்கு ஒரு கோடி பெண்கள் இலவச இணைப்பு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் 200 ரூபாய் மானியம் இந்த இதுல அறிவிப்புல இருக்கு.

உஜ்வாலா திட்டத்தில் புதிதாக எல்லோருக்கும் 200. பொதுவான விலை குறைப்பு. இது இல்லாமல் இன்னொரு 200 ரூபாய் மானியம். அந்த புதிதாக உஜ்வாலா திட்டத்தில் இணைந்தவர்களுக்கு…  அப்போ கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா…. பத்து கோடி பெண்களுக்கு 400 ரூபாய் மானியம் வருது.  விலை குறைப்பு,  மானியம் என 400 ரூபாய் குறையுது. மத்தவங்க எல்லாருக்கும் 200 ரூபாய் குறையுது என பேசினார்.