உத்தரபிரதேசம், காசியாபாத்தில் உள்ள லோனி பகுதியில் கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு தவறான வழியில் சமூக வலைதளங்களில் ஈடுபடுகிற மனைவியால் ஏற்பட்ட கோர சம்பவம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அனீஸ் என்பவர், தனது மனைவி இஷ்ரத் மீது தாக்குதல் புகார் அளித்ததோடு, இது தொடர்பான வீடியோவும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
अश्लील रील बनाने से रोका तो महिला ने किया चाकू से हमला
– उत्तर प्रदेश के ग़ाज़ियाबाद के लोनी में महिला ने किया अपने पति पर चाकू से हमला। हमले में युवक और बच्चा बाल बाल बचे. युवक ने मामले की शिकायत पुलिस को की और वीडियो भी सौपे….#UttarPradesh #GhaziabadNews #Loni #Reel… pic.twitter.com/MUrJUR4hJD— Nedrick News (@nedricknews) August 29, 2025
15 வருட திருமண வாழ்க்கை கொண்ட இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 2024ஆம் ஆண்டு முதல், மனைவி இன்ஸ்டாகிராமில் ஆபாசமான ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்குவது, பிற ஆண்களுடன் நெருக்கமாக பழகுவது போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்ததாக அனீஸ் புகார் அளித்துள்ளார். இதை எதிர்த்ததற்காக, மனைவி, கணவர் மீது புகார் கொடுத்து வருவதாகவும், மனைவி தன்னை கத்தியால் தாக்கியதை வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, லோனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஷ்ரத்தின் போக்குகள் குறித்து அவரது சுயநல விருப்பங்களும், சமூக வலைதள களத்தில் கவனம் பெற தன்னைக் காயப்படுத்தும் முயற்சிகளும், அனீஸின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மாறிவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளதாகவும், உதவி காவல் ஆணையர் சித்தார்த் உறுதி செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
