உத்தராகண்டில் மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்புகள் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், வீடுகள் இடிந்து விழுந்து, விலங்குகள் மண்ணில் புதைந்தன.
சுற்றுலாப் பயணிகளும் சிக்கி தவித்து வருகின்றனர். நிலைமையை கட்டுப்படுத்த மீட்பு படையினர் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றனர். ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசு தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
