
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக்காக தேமுதிக மறைமுகமாக பேசியதாக வந்த தகவல் குறித்து பேசிய பிரேமலதா, இந்த செய்தியை நானே அன்னிக்கு பேப்பர்ல பார்த்தேன். அந்த செய்தயை அன்னைக்கு படிக்கும்போது தான் எனக்கே தெரியும். நீங்க வந்து பத்திரிகை நண்பர்கள் இல்லாததையும், பொல்லாததையும் ஏதோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதறீங்க பல விஷயத்தை… இது முற்றிலும் ஒரு தவறான ஒரு செய்தி. நான் வந்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டது மாதிரி, நான் பேசியது மாதிரி ஒரு கருத்து நீங்க பதிய வச்சு இருக்கீங்க. இந்த மாதிரியெல்லாம் எதுவும் கிடையாது.
மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் என்றைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கிடையாது. எப்ப தேர்தல் நடந்தாலும், ஒட்டுமொத்தமாக எங்களுடைய மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பேசி… அவர்களுடைய ஆலோசனையை பெற்று, நிச்சயமாக அதற்குப் பிறகு ஒரு தெளிவான முடிவெடுப்பது தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். அதனால் யாரிடமும் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, அது ஒரு தவறான செய்தி.
திமுக தேர்தலுக்கு முன்னாடி சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்கள் அப்படிங்கறதை பத்திரிகை நண்பர்களாக நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆயிரம் ரூபாய் நம்ம பின்னாடி வருவோம்… ஒரு தொகுதிக்கு ஒரு புகார் பெட்டி வைப்போம். ஒரே ஒரு தொகுதி முழுக்க இருக்கின்ற பிரச்சினைகளை நீங்கள் அந்த புகார் பெட்டிகளில் புகார் அளிக்கலாம்.
உடனடியாக அந்த புகார்களை நானே நேரடியாக சென்று, அதை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அந்த பிரச்சினை தீர்க்கப்படும் என முதலமைச்சர் தேர்தலுக்கு முன்னாடி வாக்குறுதி கொடுத்தார். உங்கள் அத்தனை பேரிடமும் நான் கேட்குறேன்… தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில ஒரு புகார் பெட்டியாவது ஒரு மாவட்டத்தில் ஒரு புகார் பெட்டி எங்கேயாவது இருக்கிறதா ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள் தான் எங்களுக்கு பதில் சொல்லணும் என தெரிவித்தார்.