இந்தியாவில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் எப்போது வரும் என்று எம்பி அப்துசமாத் சமதானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ஹைப்பர் லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது தற்போது உலகம் முழுவதும் ஆரம்ப நிலையில் மட்டுமே இருக்கிறது. இதற்கான தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ஒரு பிரிவான ஆர்டிஎஸ்ஓ நிறுவனம் சென்னை ஐஐடி நிறுவனத்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்துக்கான சோதனை தளங்கள் மற்றும் வெற்றிட குழாய் அமைப்பதற்கான ஆய்வு மையத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் என்பது பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிவேகமாக செயல்படுத்துவதற்கான ரயில் போக்குவரத்து தொழில்நுட்பம் ஆகும்.