இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா பயன்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாக மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு ஆவணம் ஆகும். இந்நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி இந்தியாவில் வசிப்பவர்கள், பிறக்கும் குழந்தைகள், சிறுவர்கள் போன்றோர்கள் ஆதார் வைத்திருப்பதற்கு தகுதியானவர்கள். அதன் பிறகு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இதனையடுத்து 12 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டினர் ஆகியோர் ஆதார் வைத்திருப்பதற்கு தகுதியானவர்கள். இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் என்ஆர்ஐகளுக்கு 180 நாட்கள் காத்திருக்காமல் அவர்கள் இந்தியா வந்த பிறகு ஆதார் அட்டை வழங்கலாம். அதற்கான விதிமுறையும் இருக்கிறது. ஆதார் கார்டில் ஏதேனும் தனிப்பட்ட விவரங்கள் மாறினால் உடனடியாக அப்டேட் செய்து அதை மாற்றிவிட வேண்டும். மேலும் ஒரு நபருக்கு ஒரு ஆதார் அட்டை மட்டுமே உண்டு. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டை வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.