வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு  பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசியபோது “ஆதார் விபரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காத வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனினும் இதற்கான இலக்குகள் (அ) காலக்கெடு எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.