இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5000-ஐ தாண்டி உள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகம் சார்பில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்கிறார். இந்த ஆலோசனையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.