ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக இலவச உணவானது வழங்கப்படும்.

ரயில்வேயின் இந்த வசதிகளை நீங்கள் எளிதாக அனுபவிக்க இயலும். இந்திய ரயில்வேயின் விதிகளின் படி, ரயில் தாமதம் ஏற்பட்டால் ரயில்வேயின் கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது.

ரயில் 2 மணிநேரம் (அ) அதற்கு மேல் தாமதமாக வரும்போது இவ்வசதி உங்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ஆகிய விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.