இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பிரபல நடிகராக உருவெடுத்தார். இந்த திரைப்படம் சென்ற 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கியும் வருகின்றார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் ஸ்னீக் காட்சி வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதன்படி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். இதற்கான போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.