தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரனிடம்,  எடப்பாடி தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறது.

இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கு. எடப்பாடி கூட இணைவதற்கு எந்த கட்சி வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?  என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அருகில் இருந்த வைத்தியலிங்கம், சிரித்துக் கொண்டே,  எடப்பாடி கூட்டணியில் யார் வருவார்கள் என்று ஜோசியம் பார்க்கணும் என்று சொன்னார்.

உடனே அடுத்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  எடப்பாடி கூட யார் வந்தா எங்களுக்கு என்ன ? என தெரிவித்தார். ஒரு கட்சியினுடைய தலைவர்… அந்தக் கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பது நியாயம். பாட்டாளி மக்கள் கட்சி சொல்லவில்லையா ? அந்த கட்சியை சேர்ந்தவர்கள்  எங்க கட்சிக்காரன் வரணும்னு சொல்றாங்க. ஒவ்வொரு கட்சியை நடத்துகின்றவர்கள், எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வரணும்,  எங்க கட்சி முதலமைச்சராக வரவேண்டும் என்று சொல்றாங்க. கூட்டணி பேசுகிறபோது மாற்றங்கள் வரும்.

டிடிவி தினகரன் கருத்தை எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள் ? பாஜக கூட்டணியில சேருகிறீர்களா என கேட்கிறீர்கள். பாஜக என்ன முடிவு எடுக்கிறார்கள் என தெரியாது. அவர்கள் முடிவை  நாங்க சொல்ல முடியுமா ? உதாரணத்திற்கு கூட்டணி என சொல்றேன். அவங்க வேண்டான்னு சொல்றாங்க. என்ன பண்ணுவீங்க ? பாஜகவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியணும் ? அதை பொறுத்து தான் எங்களுடைய அரசியலை சொல்ல முடியும்.  உடனே அருகில் இருந்த ஓபிஎஸ்,

சுத்தி சுத்தி இதுக்குள்ளேயே வந்துகிட்டு இருக்கீங்க. எங்க சுத்துவீங்களோ மறுபடியும் அங்கேயே வரீங்க.  இப்படி சுத்துனாலும் அங்கே வரீங்க. நீங்க கேட்டீங்க பாஜகவோடு தொடர்புல இருக்கீங்களா ? என்று…  தொடர்புல இருக்கின்றோம்ன்னு சொல்லுறோம்.  தொடர்பில் உறுதியாக இருக்கிறோம். 3 மாதமாக நானும், TTVயும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.