செய்தியாளர்களிடம் பேசிய SV.சேகர், பாஜக கூட்டணியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறி இருக்கிறது. இதனால் மத்தியில் உள்ள மோடி அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய ஹாட்ரிக்  பிரைம் மினிஸ்டராக வருவது என்பது உறுதி.

ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும்,  இல்லாவிட்டாலும் தமிழ்நாடு மீது பெரிய அளவில் ஹெல்ப் பண்ண போறது கிடையாது, அந்த ஒரு காரணம்தான். அரசியல் முதிர்ச்சியோ, அரசியல் அனுபவமோ இல்லாத ஒரு காரணத்தை வைத்து அவர் அப்படி பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு தலைமையில் அமர்த்தியது தான் தவறு. அதனால அதை  உணர்வார்கள்.

மத்திய பிரதேசம் எலேக்சன் வரும் போது இங்க இருந்து அவரை பார்வையாளராக மாத்திடுவாங்க. விரைவில் தமிழ்நாட்டில் அண்ணாமலை மாற்றப்படுவார். நான் கட்சி தொடங்க வில்லை. தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கான எண்ணிக்கையை காட்டுவதற்கான  ”அறவோர் முன்னேற்ற கழகம்” என ஆரம்பிச்சு இருக்காங்க. அது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

அண்ணாமலையால் தான் இந்த கூட்டணி முறிந்தது.  அண்ணாமலையை கூப்பிட்டு திட்டிருப்பாங்க. நம்மகிட்ட சொல்லுவாரா அவரு. அவர் இந்த அழகுல கமலஹாசன்ணுக்கு அட்வைஸ் பன்றாரு.  இவரே  தான் எப்படி நடந்துக்கணும் என்று தெரியலை.

இவர் எதுக்கு கமல்ஹாசனுக்கு அட்வைஸ் பண்ணனும்.  IPS  ஆறு வருஷம் இருந்துட்டு ஓடி வந்து, அரசியல் வந்ததற்கு இவர் IPS  படிக்காம இருந்தா திறமை வாய்ந்த ஒருத்தனுக்காவது ஐபிஎஸ் படிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுவும்  போச்சு… இதுவும் போச்சு என தெரிவித்தார்.