தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய   ஓபிஎஸ், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே சொல்கிறீர்கள். நாடகமல்ல, ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற தேசிய கட்சி… 16 மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கின்ற… ஆளுங்கட்சியாக இருக்கின்ற… தேசிய கட்சி கூட்டணியில்…

NDA கூட்டணியில் பாரத பிரதமருக்கு பக்கத்திலேயே அவரை உட்கார வைத்துக் கொண்டு, அறிவித்திருக்கிறார்கள். அப்படி அறிவித்த பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமைக்கு தொடர் நம்பிக்கை துரோகம் யார் செய்து கொண்டு வருகின்றார்கள் என்று உங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும்.

நம்பிக்கை துரோக அரசியல்… உடனடி நம்பிக்கை துரோக அரசியல்….  அங்கே மீட்டிங்கில் பேசிட்டு, இங்க வந்து…  தமிழ்நாட்டுக்கு நாங்க தான் தலைமை என அவர் சொல்லப் போய் தான் ஆரம்பிச்சது இந்த பிரச்சனை. கூட்டணி கட்சியோடு இணக்கமான சூழ்நிலையில் பேச வேண்டும்.  பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை மாத்துங்க அப்படின்னு சொன்னா ஏத்துப்பாங்களா ? இவங்க…  அண்ணா திமுகவில் ஏற்றுக் கொள்வார்களா ? ஏற்றுக்க மாட்டாங்க.  அப்புறம் எப்படி இவங்க ஏற்றுக் கொள்வார்கள். தேசிய கட்சி மாநில தலைவரை மாற்றங்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என ஓபிஎஸ் ஆவேசமானார்.