உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பயனர்கள் whatsapp-ல் பகிரப்படும் வீடியோக்களை டபுள் டேப் செய்து பாஸ்வேர்ட் மற்றும் பேக்வேர்டு என முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீண்ட வீடியோக்களை எளிதில் குறிப்பிட்ட இடத்திலிருந்து நீங்கள் பார்க்க முடியும்.

பயனர்கள் வீடியோக்களை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும் எனவும் இந்த அம்சம் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என தெரிகின்றது. தற்போது இந்த புதிய அம்சம் whatsapp ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை கொண்டு வீடியோக்கள் ஃபார்வர்ட் மற்றும் பேக்வேர்ட் செய்ய முடியும். மேலும் இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.