உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் சமீபத்தில் சேனல் வசதிகளை அறிமுகம் செய்தது. இந்த சேனல் வசதிகள் மூலமாக செய்திகளை தனிநபர் மற்றும் செய்தி நிறுவனங்களிடமிருந்து வாட்ஸ் அப்பில் தகவல்களை உடனுக்குடன் பெற முடியும். இந்த நிலையில் whatsapp சேனலில் வாய்ஸ் மெசேஜ் மற்றும் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை இனி அனுப்பலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சேனல் அட்மின்கள் தங்களுடைய பின் தொடர்பாளர்களோடு பேசுவதற்கு வசதியாக பல அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. உங்களது வாட்ஸ் அப்பை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் இந்த புதிய வசதியை பெறலாம். Whatsapp சேனலில் இதுவரை டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்ப முடிந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டுகளால் கூடுதல் தரவுகளை பயனர்களால் அனுப்ப முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.